இன்று அதிகாலை 3 மணியளவில் குளியாப்பிடிய குருணாகல் பிரதான வீதியில் ஹொறொம்பாவ பகுதியில் பிக்குகள் 8 பேர் பயணித்த வேன் வண்டியொன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இவ் விபத்தில் பிக்கு ஒருவரின் கால் உடைந்து உள்ளதாகவும் அவர் குருணாகல் போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அத்துடன் வேனில் பயணித்த ஏழு வயது சிறுவன் ஒருவனும் விபத்துக்குட்பட்டுளான் அத்துடன் சிறுவன் கொழும்பு போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.மேலும் சாரதி நித்திரை கொண்டமையேவிபத்துக்கான காரணம் என போக்குவரத்துப் பொலிசார் தெரிவித்தனர்.