தீய சக்திகளின் கெடுபிடிகளில் இருந்து இந்த உம்மத்தையும், நமது உயிர் உடமைகளையும், கௌரவத்தையும், நமது பள்ளி வாயால் களையும் பாது காத்தருள் வாயாக,
நய வஞ்சகர்களிடமிருந்தும் சூழ்ச்சிகள் செய்வோரிடமிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக, நிர்க்கதியாய் நிராயுத பாணிகளாய் இருக்கும் உனது அடியார்களை குறி வைப்போர் மீது உனது அத்தாட்சிகளை காண்பிப்பாயாக!
யா அல்லாஹ்!
சிரியா நாட்டையும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பாயாக, சிரியா மக்களை கொடிய பசர் ஆசாத் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் இருந்து பாது காப்பாயாக,
முஸ்லிம்கள் மீது ஆயுத அராஜகத்தை கட்டவிழ்த்துள்ள எதிரிகளை அழித்து ஒழித்து விடுவாயாக,
தமது உயிர் உடமைகளையும் தாய் மண்ணையும் மீட்கப் போராடும் போராளிகளை பாது காப்பாயாக, அவர்களுக்கு உனது குத்ரத்தை கொண்டு உனது பட்டாளங்களைக் கொண்டு உதவி புரிவாயாக, எல்லை கடந்த ஈமானிய உறவுகளை அரவணைக்கின்ற தலைவர்களை முஸ்லிம் தேசங்களில் உருவாக்குவாயாக!
நயவஞ்சக ஆட்சியாளர்களை ஒழித்துக் கட்டுவாயாக.!



