Post views-

குடிபோதையில் பொலிசாருடன் சண்டையிட்ட பிரபல கட்சி தலைவரின் மகன்: பரபரப்பு வீடியோ

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசரின் மகன் நண்பர்களுடன் குடித்துவிட்டு பொலிசாருடன் சண்டையிட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். அவருக்கு ராமச்சந்திரன், விஷ்ணு என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலைியல், இரண்டாவது மகன் விஷ்ணு இரவு தனது நண்பர்கள் மூன்று பேருடன் மது அருந்தி விட்டு அண்ணா நகர் பகுதியில் தகராறு செய்துள்ளார்.
உடனே பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அது குறித்து கேட்க காவல் ஆய்வாளருடமும் விஷ்ணு தகராறு செய்துள்ளனர்.
காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றவுடன் அங்கேயும் திருநாவுக்கரசர் மகன் என்று கூறி பிரச்சனை செய்திருக்கிறார்கள்.
அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த பொலிசார் சொந்த ஜாமீனில் உடனடியாக அனுப்பி வைத்திருக்கிறார்கள். விஷ்ணு தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு பொலிசாருடன் வாக்குவதத்தில் ஈடுபடும் பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்