
ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமராக இருப்பவர் ஷேக் ஷேப் பின் செயது அல் நியான். இவர் பாகிஸ்தான் நாட்டின் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்திற்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தார். இந்த நிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பு வாகனத்தில் குஹாக் பகுதியில் பறவை வேட்டைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது துப்பாக்கி ஏந்திய 10 பேர் கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
திடீர் என அவர்கள் துப்பாக்கியால் துணை பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற வாகனங்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். இதில் அவர்கள் சென்ற 2 வாகனங்கள் குண்டுகள் பாய்ந்து சேதமடைந்தன. அதிஷ்டவசமாக துணைப் பிரதமர் ஷேக் ஷேப் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை பன்ச்கூர் பகுதி துணை போலீஸ் கமிஷனர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தடை செய்யப்பட்ட பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிகழ்வு இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் துணைப்பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் துப்பாக்கி சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ஆனால் இந்த செய்தி வளைகுடா செய்தித்தாள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது வியப்பாக உள்ளது.



