தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் முக்கிய சந்தேகமாக இருப்பது சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவைத் தவிர மற்ற யாரும் ஏன் அனுமதிக்கப்படவில்லை, புகைப்படம் ஏன் வெளியிடப்படவில்லை என்பது தான்.
தற்போது அதற்கு பதில் கிடைக்கும் வகையில் பிரபல பத்திரிக்கையாளரும், கத்துக்குட்டி படத்தை இயக்கிய சரவணன் என்பவர், பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரத்யோக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதாவை யார் யார் எல்லாம் பார்க்கலாம் என்பதை மருத்துவர்கள் தான் முடிவு செய்தார்கள் என்றும் அதுமட்டுமின்றி ஜெயலலிதாவுக்கு ஆரம்ப காலத்தில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது சசிகலவே சுமார் இரண்டு, மூன்று நாட்கள் ஜெயலலிதாவை பார்ப்பதற்கு மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என கூறியுள்ளார்.
அதே போன்று ஜெயலலிதா இறந்த நேரம் சரியாக இரவு 11.30 மணி என்பது தங்களுக்கு சரியாக தெரியவில்லை என்றும் மருத்துவர்கள் சசிகலாவுக்கு தெரிவித்த நேரமே அந்த நேரம் என கூறியுள்ளார்.
மேலும் கடந்த 23 ஆம் திகதியே ஜெயலலிதாவை கார்டனுக்கு அழைத்துச் சென்றுவிடலாம் என்று முடிவு செய்ததாகவும், அதன் பின்னர் ஏதேனும் தவறு நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே மருத்துவமனையில் இருந்ததாக கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து ஜெயலலிதா உடல் நிலை சற்று சீராகியும், தொடர்ந்து பேச முடியாத நிலையில் சீரமம் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
கடைசி வரை ஒரு சிலேட்டில் தான் யாரை சந்திக்க வேண்டும் என்பதை அவர் எழுதிகாட்டியதாகவும் கூறியுள்ளார்.
பேசமுடியாத சூழ்நிலையில் இருந்ததால் அவர் யாரையும் பார்க்க விரும்பவில்லை என்றும் இடைத்தேர்தலின் போது கூட அவர் பேச முற்பட்டதாகவும் ஆனால் அது தோல்வியில் முடிந்ததாகவும், ஸ்பீக்கர் வைத்து கூட பேச முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார்.
பேச முடியாததற்கு காரணம் ஜெயலலிதாவுக்கு தொண்டையில் செய்யப்பட்ட சிகிச்சையே காரணம் என கூறியுள்ளார்.
மேலும் மேக் அப் இல்லாமல் தன் முகத்தை காட்டுவதற்கு ஜெயலலிதாவுக்கு சற்று தயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் எப்போது தன்னை முழுமையாக தயார் செய்த பின்னரே வெளியே வருவார் அப்படி இருக்கும் ஒரு முதல்வர் சாதரண ஒரு சிகிச்சையின் போது, மருத்துவ உடை அணிந்திருப்பது சற்று தயக்கத்தை ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
சரவணன் ஜெயலலிதாவின் இறுதி நாட்களின் உடன் இருந்தவர், அவர் இறந்த பின்பும் உடலை எடுத்துச் சென்று புதைக்கும் வரை உடன் இருந்தவர் என கூறப்படுகிறது.



