Post views-

கிழககு மாகாண சபையில் சுபையிர் Mpc ஆற்றிய உரை

வெளிமாகாணங்களில் நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண கல்விக் கல்லூரி ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தில் இணைப்பதற்குரிய நடவக்கைகளை கிழக்கு மாகாண முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் மேற்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 64ஆவது சபை அமர்வு (6) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது போது கல்விக் கல்லூரியிலிருந்து வெளியான கிழக்கு மாகாண ஆசிரியர்களை எக்காரணம் கொண்டும் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே நியமனம் வழங்கக்கூடாது என மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம் அன்வர் மற்றும் ஜே. ஜெனார்த்தனன் ஆகியோரால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்   கல்விக் கல்லூரி ஆசரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட போது ஒரு ஆசிரியருகக்கு ஊவா மாகாணத்திலே நியமனம் கிடைத்தது உண்மையில் அவருக்கு அந்தப்பாடசாலைக்கு செல்ல முடியாததொரு சூழ்நிலையும் உள்ளது அப்போது அந்த ஆசரியரும் அவருடைய தகப்பனும் வந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என என்னிடம் கூறினர்.

குறிப்பாக கல்விக் கல்லூரியில் பயிற்சியை முடித்து வெளியேறிய ஆசிரியர் ஒருவர் நியமனம் பெற்று கடமைக்கு செல்லவில்லையானால் அவரின் பயிற்சிக்காக அரசாங்கம் செலவு செய்த பணங்களை செலுத்த வேண்டும் இவ்வாறானதொரு நிலையிலே அவர்கள் ஆசிரியர் இடமாற்றம் தறாவிட்டாலும் பறவாயில்லை கடன் தொல்லையிலிருந்து தங்களை காப்பாற்றுமாறு கவலையோடு தெரிவித்தனர்.

ஒரு கல்விக் கல்லூரி ஆசிரியர் சுமார் இரண்டு வருடம் கல்விக் கல்லூரியில் பயிற்ச்சியை நிறைவு செய்து அவர் மேலும் ஒரு வருடம் பாடசாலைகளில் பயிற்சி ஆசிரியராக கடமையாற்றி மொத்தமாக மூன்று வருடங்கள் பயிற்சியில் ஈடுபட்டு  மிவும் கஷ்டப்பட்ட ஒருவர் வெளி மாகாணங்களுக்குச் சென்று ஒருபோதும் கற்பிக்க முடியாது.

கடந்த காலங்களில் கல்விக் கல்லூரியிலிருந்து வெளியேறிய பல ஆசிரியர்கள் இன்னும் எங்களுடைய மாகாணத்திற்குள் அவர்களுடைய சொந்த மாவட்டத்தை விட்டும் வெளிமாவட்டங்களில் கடமையாற்றுகின்றனர். குறிப்பாக அம்பாரை மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நீண்டகாலமாக திருகோணமலை மாவட்டத்திலே கடமையாற்றுகின்றனர். அவர்களுடைய நியமனக் கடிதங்களில் ஐந்து வருடங்கள் அப்பாடசாலைகளில் கடமைபுரிய வேண்டும் என குறிப்பிடப்பட்டும் ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் அவர்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு செல்லமுடியாத நிலை காணப்படுகிறது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே ஆசிரியர் வெற்றிடம் அதிகமாக காணப்படும் சூழ்நிலையில் எங்களுடைய மாகாண ஆசிரியர்களை வெளிமாகாணங்களில் நியமிப்பதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அண்மையில் நான் மத்திய அரசாங்க கல்வி ராஜாங்க அமைச்சரை பாராளுமன்றத்தில்  சந்தித்து கிழக்கு மாகாண கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனம் தொடர்பில் பேசியபோது ஆசிரியர்கள் தொடர்பில் முறைப்பாடொன்றை செய்யுமாறும் அப்போதுதான் மாற்றுத்திட்டங்களை செய்ய முடியும் எனவும் கூறினார்.

எனவே கிழக்கு மாகாண முதலமைச்சரும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சரும் மிகத்தீவிரமாக செயற்பட்டு கல்விக் கல்லூரி ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தில் நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

எம்.ஜே.எம்.சஜீத்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்