படிப்பினுடைய_அவசியத்தை_உணர்ந்த_காரணத்தினால்_தான்
📚இரவு முழுவதும் தொழுகையில் ஈடுபடுவதை விட ஒரு மணி நேரம் கற்பித்தல் மேலானது என்கிறார்
-#நபிகள்_நாயகம்.
📚நஞ்சு கொடுக்கப்படும் நேரம் வரை கிரேக்க நாட்டு கவிதைகளை படித்து கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தான்
-#சாக்கரட்டிஸ்.
📚தூக்கு கயிற்றை முத்தமிடும் வரை படித்து கொண்டு இருந்தான்
-#உமர்முக்தார்
📚படுக்கின்ற இடம் கூட படிப்பதற்கு அருகாமையில் கேட்டார்.
-#அன்னேல்_அம்பேகார்
📚படித்து கொண்டிருந்த புத்தகத்தை முடித்து விட வேண்டும் என்பதற்காக தன்னுடைய அறுவை சிகிச்சையையே அடுத்தநாள் மாற்றியமைக்க சொன்னார்
-#பேரறிஞர்_அண்ணா
📚பயணங்களின் போது எல்லாம் படிப்பதையே தன்னுடைய வழக்கமாக கொண்டிருந்தார் பாரத்தினுடைய முதல்வர்
- #ஜவகர்கலா_நேரு
📚படித்து கொண்டிருந்த புத்தகத்தையே முடிக்காமல் தூக்கத்தையே மறந்தவர் இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி
-#ராதாகிருஷ்ணன்
📚படிப்பால் மட்டுமே பாரதத்தை பாராள வைக்க முடியும் என்று படித்து படித்து சொன்ன மாமனிதர்
-#APJஅப்துல்கலாம்
📚35 ஆண்டுகள் நூலகத்திலே மூழ்கி மூலதனம் எனும் வேதாந்தத்தை கண்டுபிடித்தான் இன்று வரை கமினிஸ்களுடைய பைபிலாக போற்றப்படும்
-#கால்மார்க்ஸ்.
இதெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் படிப்பு ஒரு மனிதனை எந்தளவிற்கு உயர்த்தும் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.
பிக்காசோவின் ஓவியத்தை விட
பீத்தோவனின் இசையை விட
கியுகோவின் உடைய ஒரு வாக்கியம், கதையின் உடைய ஒரு கடைச்சொல், கம்பனின் ஒரு செய்யுள்,
பாரதியினுடைய ஒரு பாட்டு ஏன் கண்ணதாசனுடைய ஒரு வரி நம்முடைய வாழ்க்கையை புரட்டி போட்டு விடுகிறது அதற்காக படிக்க வேண்டும்.
கற்றுக் கொள்வது மனித பண்பு,
கற்றுக் கொடுப்பது மனித மாண்பு.
கற்க தொடங்குபவன் மாணவன்,
கற்று கொண்டே இருப்பவன் ஆசிரியன்.
கற்று கற்றுக் கொடுப்பதனால் தான் ஆசிரியரை கற்று கொடுப்பவர் என்று சொல்கிறோம்.
நமக்கு அதிகமான ரோஜா பூ வேண்டும் என்றால் அதிகமான ரோஜா செடி நட வேண்டும் என்பது இயற்கை. நமக்கு அதிகமான அறிவு வேண்டும் என்றால் அதிகமான புத்தகங்களை படிக்க வேண்டும்.
"நீர் அளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூல்லவே ஆகுமாம் நுண்ணறிவு."
நிறைய பட்டங்களை பெற்று தன்னுடைய பெயரை அலங்கரிப்பவரை விட நல்லபுத்தகங்களை படித்து தன்னுடைய மனதை அலங்கரிக்கின்ற ஆசிரியர்கள் மேன்மையானவர் என்பேன்...
#கற்று_கொடுப்பவர்_எல்லாம்_ஆசிரியர்கள்_இல்லை_யாரிடம்_மாணவன்_கற்கிறானோ_அவரே_ஆசிரியர்...
அவ்வாறான ஆசிரியர்கள் அனைவருக்கும்#ஆசிரியர்_தின_நல்_வாழ்துகள்.. இவன் உங்கள் பிரசன்னா