(எம். எஸ். எம் சாஹிர்)
ஆய்வு எழுத்தாளரான கல்முனை எம். ஐ. றபீக்கின் எழுதிய “அறிவுக் கண் ஆயிரம்”
நூல் வெளியீட்டு விழா
எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியில்
அமைந்திருக்கின்ற அல் - பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் நடை பெறவுள்ளது.
சட்டத்தரணி அன்பு முகைதீன் றோஷன் அக்தர் தலைமையில் இடம் பெறும் இவ்விழாவில்,
பிரதம அதிதிகளாக கல்முனை
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை டாக்டர் யூ.எல். சறாப்தீன், முன்னாள் வர்த்தக, வாணிப, கப்பல்துறை அமைச்சர் ஏ.ஆர்.
மன்சூர், முன்னாள்
பிரதி அமைச்சர் எம்.ரீ. ஹசன் அலி, இலங்கைக்கான ராஜதந்திரி எஸ். எச். அப்துல் அஸீஸ், முன்னாள் பிரதி அமைச்சர் பசீர்
சேகுதாவூத், தமிழ் மொழித்துறை தலைவர் றமீஸ் அப்துல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.
அப்துல் றஸ்ஸாக்(ஜவாத்), அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ்,
முன்னாள் தவிசாளர் எம்.எச்.
சேகு இஸ்ஸதீன், டாக்டர் கே.எல்.எம். றயீஸ் ஆகியோர் கலந்து கொள்வர்.
விழாவில் கௌரவ அதிதிகளாக, சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட், சிரேஷ்ட சட்டத்தரணிகளான எஸ்.எம்.ஏ.
கபூர், யூ.எல்.லியாக்கத்
அலி, என்.எம்.
காரியப்பர், டாக்டர் ஏ. வாஹிதீன் பொறியிலாளர் எம்.எம்.
அப்துல் மஜீத், மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், சுங்க அதிகாரி ஏ.எல்.எம். ஸபீர் மற்றும்
சிறப்பு அதிதிகள், இலக்கியப் புரவலர்கள், பிரபல வர்த்தகர்கள், கலை இலக்கியவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள்
எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய்
அழைக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.
இது நூலாசிரியரின் இரண்டாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.