Post views-

பணம் பெறும் சாதனமாக கிழக்கு மக்களின் வாக்குகள் பயன்படுத்தப்படுகிறது

 
(எம்.ஜே.எம்.சஜீத்)
 
அரசியலமைப்பு மற்றும் தேர்தல் மறை மாற்றம்இஇனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற விடயங்களுக்கு பணம்பெறும் சாதனமாக கிழக்கு மாகாண மக்களின் வாக்குகள்முஸ்லிம் அரசியல் தலைவர்களால் பயன்படுத்தப்படுகிறது எனகிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர்தெரிவித்தார்.

மூதூரில் நடைபெற்ற சுதந்திரக் கிழக்கு பிரகடனப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதேஅவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் சுதந்திர கிழக்குப்பிரகடன நிகழ்வு என்பது அரசியலுக்கப்பால் ஒட்டுமொத்தமுஸ்லிம் சமூகத்திற்காகவும் குரல் கொடுக்கின்ற ஒருபோராட்டமாகும். நான் வேறு கட்சியை சார்ந்தவானாகஇருந்தும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவோடு இந்தப்போராட்டத்திலே இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றேன். அண்மைக்காலமாகஇராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவும்வடஇகிழக்கு இணைப்பிற்கு எதிராக  குரல்கொடுத்துவருகின்றார்.
 
குறிப்பாக நாங்கள் முஸ்லிம் காங்கிரசை விமர்சிக்க இங்குவரவில்லை அந்தக்கட்சியினுடைய தலைமை விடுகின்றதவறுகளையும்இ பிழைகளையும் சுட்டிக்காட்ட வேண்டியதருனம் ஏற்பட்டுள்ளது. அதனாலே அத்தலைமை தொடர்பில்எமது சமூகத்தின் மத்தியில் விழிப்பூட்டுவதற்காகவேவந்துள்ளோம்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட போது மறைந்தபெருந்தலைவர் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலேமுஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை பிரகடனப்படுத்தி அரசியல்கட்சியாக பதிவு செய்த வேளையிலே சிங்களப்பேரினவாதிகளும்இ அப்போதிருந்த ஜே.ஆர் ஜயவர்த்தன மற்றும்முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியும் கிழக்கிலுள்ளமுஸ்லிம்களை அடிமைப்படுத்தி இலங்கை இந்தியஒப்பந்தங்களைச் செய்ததனை நாங்கள் ஒருபோதும்மறந்துவிட முடியாது.

அப்போது எனது சமூகத்தை வடக்கோடு இணைத்து ஒருஅடிமைச்சமூகமாக மாற்றி அவர்களின் அரசியல் விலாசத்தைஅழிப்பதற்காக இந்தச் சூழ்ச்சியை இரண்டு தலைவர்களும்செய்துவிட்டார்கள் இதற்கெதிராக போராட வேண்டியஅவசியம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு முஸ்லிம்களுடையஒட்டுமொத்த வாக்குப் பலத்தையும் வைத்து இதற்கெதிராகஜனநாயக ரீதியாகப் போராட வேண்டும் என அந்தபெருந்தலைவன் குரலெழுப்பிய வரலாற்றையும் ஒருபுறம்மீட்டுப்பார்க்க வேண்டியுள்ளது.

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்அவர்களின் மறைவிற்குப் பின்னர் ரவூப் ஹக்கீம்வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தும்இந்தக்கட்சியிலே இருந்துவிட்டார் என்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் 10பேரையும் கொடுத்துஇந்தக்கட்சியை அமாநிதமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றுஒப்படைத்தோம் இறுதியில் நடந்தது என்ன?
மறைந்த தலைவர் இருந்த போது முஸ்லிம் இளைஞர்களுக்குபல்லாயிரக்கணக்கான தொழில் வாய்ப்புக்கள்இ முஸ்லிம்களுக்கென்று தனியான பல்கலைக்கழகம்இ முஸ்லிம்களுக்கென்று தனியான ஆண்கள்இ பெண்கள்கல்லூரிகள்இ தனியான துறைமுகம் என பல சாதனைகளைநிகழ்த்திவிட்டு தலைமைத்துவம் கைமாறப்பட்டது. ஆனால்ரவூப் ஹக்கிம் இந்தச் சமூகத்திற்கு எதனைச்செய்துகொடுத்தார் என்றால் ஒன்றுமே இல்லை.

அன்று பெருந்தலைவர் குறிப்பிட்டுச் சொன்னார் ஐக்கியதேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கஇருக்கும் வரையில் அந்த பஸ்ஸிலே ஏறவேண்டாம். அவரைநம்ப வேண்டாம் அவர் முஸ்லிம்களின் எதிரி ஆகவே அவரோடுபிரயாணம் செய்யாதீர்கள் என்று வஸிய்யத்துச் செய்தார்.

இன்று என்ன நடைபெறுகிறது என சிந்தித்துப் பாருங்கள்கட்சியிலே இருந்த அத்தனை மூத்த போராளிகளும்விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
மறைந்த தலைவருடையமனைவிஇ குடும்பம் முஸ்லிம் காங்கிரசில் இருந்தும்தூரமாக்கப்பட்டிருக்கின்றார்கள். தலைவர் ரவூப் ஹக்கீம்முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்ற அபிலாசைகளைப்பெற்றுக்கொடுக்கின்ற ஒரு நம்பகமிக்க தலைவராகஇருக்கின்றாரா? என்பதனை இந்த சமூகம் சற்று சிந்திக்வேண்டும். 

வடஇகிழக்கு இணைந்திருந்த காலப்பகுதியில் தமிழ் தேசியவாதத்தையும்இ தமிழ் பேரினவாதத்தையும்இ விடுதலைப்புலிகளையும் எதிர்த்து இந்த சமூகத்தைகட்டிக்காத்து பெற்றுக்கொடுத்த அந்த சுதந்திரத்தை இன்றுநீங்கள் வாக்களித்த தலைவர் மற்றும் இன்னுமொரு தலைவர்வடக்கிலே இருந்துகொண்டு டயஸ்போராக்களிடம் பேரம்பேசிவடக்கையும் கிழக்கையும் இணைத்து அவர்களுடைய அரசியல்பயணத்தை தொடர்வதற்கும் அதன் மூலம் கிடைக்கின்றவருமானத்தைக்கொண்டு கொழும்பிலே பலஅடுக்குமாடிகளைக் கொண்ட தொழில் பேட்டைகளைஆரம்பிப்பதற்கான சூழ்ச்சிகளும்நடைபெற்றுக்கொண்டிருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்