Post views-

வீதி விபத்தை தடுக்க அடுத்தகட்ட நகர்வு

ஏ.எல்.டீன்பைரூஸ்
காத்தான்குடி பிரதான வீதியில் அடிக்கடி இடம் பெற்று வரும் வீதி விபத்தினை தடுக்க அரசியல் தலைமைகளினால் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தற்போது அதிகமான வீதி விபத்துக்கள் மஞ்சல் கடவைகளில் இடம் பெறுகின்றன. அதனை தடுப்பதற்காக காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள பாதசாரிகளுக்கான மஞ்சல் கடவைகளுக்கு முன்னால் பெயின் மூலமான வேகத்தடை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. 

இது இவ்வாறிருக்க
அதன் அடுத்த கட்டமாக காபட் மூலமாக இரண்டு இஞ்சி உயரத்தில் Speed Breaker வேகத்தடை தற்போது காத்தான்குடி பிரதான வீதியில் போடப்படுகின்றது இதன் மூலம் எந்த வகை வாகனமாக இருந்தாலும் இதனூடாக வேகமாக செல்ல முடியாது என அதிகாரிகள் இதன் போது தெரிவித்தனர்.

தற்போது காத்தான்குடி பிரதான வீதி குட்வின் சந்தியை இலக்காகக் கொண்டு மேற்படி Speed Breaker  வேகத்தடை போடப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்