Post views-

இதற்குமுன் பிள்ளையை, கைநீட்டி அடித்ததில்லை - பெண் பிசாசு வாக்குமூலம்

நீர்வேலி பகுதியில் சிறுமியை தாக்கிய தாயாரை எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் க. அரியநாயகம் உத்தரவு இட்டுள்ளார்.

நீர்வேலி பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் சிறுமியை தாக்கியமை தொடர்பிலான வீடியோ காட்சி நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப் பட்டு இருந்தன.

அதனைத் தொடர்ந்து கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி கோப்பாய் பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து தாயார் நேற்று இரவு கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

இன்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் க.அரியநாயகம் முன்னிலையில் முற்படுத்திய போது , தாக்குதல் மேற்கொண்ட பெண்ணை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமி உட்பட  தாயின் மூன்று பிள்ளைகளையும் சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறும் பதில் நீதிவான் உத்தரவு இட்டார்.

அதேவேளை தாக்குதல் மேற்கொண்ட பெண்ணிடம் எதற்காக சிறுமியை தாக்கினீா் என பதில் நீதிவான் வினாவிய போது , நேற்றைய தினம் பாடசாலைக்கு செல்ல மாட்டேன் என சிறுமி கூறியதால் தான் அடித்தேன் என கூறினார். அத்துடன் தான் இதற்கு முன்னர் பிள்ளையை கை நீட்டி அடித்தது இல்லை எனவும் தாய் கூறினார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்