Post views-

அதிகாரம் வழங்கப்படுகின்றது என்றால் யாருக்கு அதிகாரம் வழங்கப்படுகின்றது வை.எல்.எஸ். ஏறாவூரில் கேள்வி


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்.

ஆகவே கிழக்கிற்கு வெளியில் அதிகாரம் வழங்கப்படுகின்ற பொழுது  மூன்று மாகாண சபைகளில் ஒரு மாகாண சபை உறுப்பினர் கூட எமக்கில்லைமுஸ்லிம் சமூகத்தினை 'உம்மா' என்று சொல்லுகின்றோம்முஸ்லிம் சமூகத்தில் எந்த இடத்தில் அடி விழுந்தாலும் எங்கள் ஒவ்வொருவருக்கும் வலிக்கின்றதுஅந்த வகையிலே வட மாகாணத்தில் கூட மூன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை பெற்றுகொள்ள முடியாதுஇந்த நிலையில் அதிகாரம் வழங்கப்படுகின்ற பொழுது அந்த அதிகாரம் உச்சக்கட்ட அதிகாரமாகவும் இருக்க போகின்றது.

இன்று மத்திய அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு ஓரளவேனும் அரசியல் பலம்  இருக்கின்றதுஆனால் பகிர்ந்தளிக்கப்படப்போகின்ற அதிகாரத்தினால் முஸ்லிம் சமூகம் ஒன்றுக்கு மேற்பட்ட அரசாங்கங்களினால் ஆழப்பட போகின்ற நிலையில் முஸ்லிம்களினுடைய நிலைமை என்ன?இருக்கின்ற அதிகாரத்திற்கு மேலாக அதிகமான அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்படுகின்ற அதே நேரத்தில் பொலீஸ் அதிகாரமும், காணி அதிகாரமும் வழங்கப்பட இருக்கின்றது.இவ்வாறான இக்கட்டான நிலையில் முஸ்லிம்களினுடைய நிலைமை என்ன?

பொலீஸ் அதிகாரம் வழங்கப்படுகின்ற பொழுது தப்பித்தவறி கலவரம் ஏதும் ஏற்படுமானால் முஸ்லிம்களினுடைய நிலைமை என்ன என்பது பற்றி நாம் சிந்தித்திருக்கின்றோமாஅப்படி கலவரம் ஏதும் ஏற்பட்டால் நிலைமை கட்டுக்கடங்காத நிலைமையில்தான் மத்திய அரசாங்கத்திலிருந்து மேலதிக படைகள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்படும் நிலைமை ஏற்படும்ஒரு வேளை  நிலைமை கட்டுக்கடங்காத நிலைமை ஏற்பட்டால் அங்கே கோடிக்கணக்கான சொத்துக்களும் அதிகளவான உயிர்களையும் இழக்க நேரிடும்.ஆனாலும் மத்திய அரசாங்கத்திலிருந்து மேலதிக படைகளை பாதுகாப்பிற்கு எடுப்பதென்றாலும் குறித்த மாகாணத்தில் அதிகாரத்தில் உள்ள முதலமைச்சரின் அனுமதியின்றி வரவழைக்க முடியாது என்பது வேறுவிடயமாகும்.

மறு பக்கத்திலே இவ்வாறான அதிகாரம் எந்த வகையில் வழங்கப்படவுள்ளது என்றால் அது சமஷ்டி வடிவில் வழங்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுஅந்த வகையிலே சமஷ்டி அதிகார பகிர்வானது வடிவத்தில் சமஷ்டியாக இல்லாமல், விடயதானங்களில் சமஷ்டியாக கொண்டுவருவதற்கான ஏற்பாடே நடந்தேறிக்கொண்டிருக்கின்றதுஅடுத்த மாதமளவில் அரசாங்கத்தினுடைய அதிகார பகிர்வு சம்பந்தமான அரசியல் அமைப்பு சீர்திருத்த நகல் வெளிவரலாம்அதில் சமஷ்டி எனும் பதம் இருக்காது ஆனால் விடயதானங்களில் சமஷ்டித் தன்மை காணப்படும்.

இந்த ஆபத்தினை எம்மில் எத்தனை பேர் புரிந்திருக்கின்றோம்.  சிலர் தமிழர்களுக்கு வழங்கப்பட உள்ள சமஷ்டி முறைமையானது முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என கூறுகின்றனர்சமஷ்டி என்பது கடையில் வாங்குகின்ற சாமான் கிடையாதுஉலகிலே தமிழர்களுக்கென்றும் முஸ்லிம்களுக்கு என்றும் வேறான சமஷ்டி கிடையாதுஇவ்வாறு கதைப்பவர்கள் வேறு யாருடையாவது பின்னணியில் கூறுகின்றார்களோ என்று சந்தேகப்பட தோன்றுகின்றது.



சில அரசியல்வாதிகள் சமஷ்டி என்றால் அதிகமான அதிகாரம் என்று நினைத்து கொண்டிருக்கின்றார்கள்.எவ்வளவு அதிகாரம் என்பதற்கும் சமஷ்டிக்கும் தொடர்பில்லை.அதாவது ஒற்றையாட்சியில் மத்திய அரசாங்கத்திற்கு ஒரு படி குறைந்ததாகவே மாகாண அரசாங்கங்கள் இருக்கும்மத்திய அரசாங்கம் கொடுத்த அதிகாரத்தினை தேவையான நேரங்களில் மத்திய அரசாங்கம் மீள பெற்றுகொள்ளவும் முடியும்அவ்வாறான ஏற்பாடுகள் கானப்படுமாயின் அதுதான் ஒற்றையாட்சி ஆகும்.

ஆனால் சமஷ்டி ஆட்சி முறைமையில்  மாகாண அரசாங்கங்களும் மத்திய அரசாங்கமும் சம அதிகாரத்தன்மை வாய்ந்ததாக காணப்படும்.மத்திய அரசாங்கம் மாகண அரசாங்கங்களில் தலையிட முடியாதுகொடுத்த அதிகாரத்தில் யாருக்கும் கையடிக்க முடியாதவகையிலே சமஷ்டி முறைமையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு எதுவும் செய்ய முடியாதவகையிலே அரசாங்கங்கள் அமைக்கப்படும்அவ்வாறு மாற்றங்களை கொண்டுவருவதானால் மாகாண அரசாங்கங்களின் சம்மதத்துடன் தான் மாற்றங்களை கொண்டுவர முடியும்.சுருக்கமாக கூறின் எந்த மாற்றங்களையும் செய்ய முடியாமல் இருப்பதுதான் சமஷ்டி முறைமையாகும்.



உதாரணத்திற்கு தற்பொழுது உள்ள நிலைமையில் கிழக்கு மாகாணத்தினை எடுத்துக்கொண்டால் மத்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டிலோ அல்லது மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில்லோ ஏதாவது கட்டிடங்களை கட்டினால் மதிய அரசில் உள்ளவர்களால் மாகாண சபையின் அதிகாரமின்றி விழாக்களில் கூட கலந்து கொள்ளமுடியாத நிலைமையேகாணப்படுகின்றதுஅவ்வாறிருக்கையில் சமஷ்டி எனும் அதிகாரம் வழங்கப்பட்டால் அதன் அதிகாரம் எந்தளவில் இருக்கும் என்பதனை விளக்கமளித்துதான் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லைஅதாவது இன்று மாகாண சபைகளுக்கு குறைந்த அதிகாரங்கள் இருக்கின்ற பொழுதே மாகாண சபைக்கு கீழ் வருகின்ற ஒரு விடயத்தில் மத்திய அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர் ஒருவர் நிதியைக் கொண்டுவந்து ஒரு கட்டிடத்தைக் கட்டினால் கூட அவரினாலேயே ஒரு திறப்பு விழா செய்ய முடியாத நிலை இருக்கின்றது.  எனவே சமஷ்டி வழங்கப் பட்டால் அந்த மாகாண அரசாங்கத்தை மத்திய அரசாங்கமும் தட்டிக் கேட்க முடியாது. கிழக்கைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் நமக்கு பிரதிநிதித்துவப் பலமும் கிடையாது. இந்நிலையில் சட்டிக்குள் போட்ட கறியின் நிலையில் அவஸ்த்தைப் படப்போகின்றோம்.

இந்த நாட்டிலே தமிழர்கள் எப்பொழுதும் தங்களை ஒரு தேசியமாக கூறி வருகின்றார்கள்அடிக்கடி சம்பந்தன் உட்பட பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்களுடைய "சுய நிர்ணய உரிமையினை " அங்கீகரிக்க வேண்டும் என கூறி வருகின்றார்கள்அதிகாரம் கேட்கின்றார்கள் , சமஷ்டி கேட்கின்றார்கள். இவை இரண்டும் முஸ்லீம்களுக்கு ஆபத்தானது. அவை ஒரு புறம் இருக்கட்டும் . எதற்காக சுயநிர்ணய உரிமை கேட்கின்றார்கள் .சுய நிர்ணைய உரிமை என்றால் என்னமுஸ்லிம் சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் சில அரசியல்வாதிகள் கூட முஸ்லிம்களினுடைய சுயநிர்ணய உரிமைகள் பற்றி பேசுகின்றார்கள்ஆனால் எவரும் இன்று வரைக்கும் சுய நிர்ணய உரிமை என்றால் என்னவென்று கூறவில்லை.

முஸ்லிம் தேசியம் என்கின்றார்கள், தமிழ் தேசியம் என்கின்றார்கள்தேசியத்திற்கான அடிப்படை தகுதிகள் என்னஎன்பது பற்றி முஸ்லிம் தேசியம் பற்றி கதைப்பவர்களுக்கு தெரியுமாதமிழ் தரப்பினர் அதிகாரம் கேட்கின்றார்கள் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்சமஷ்டி கேட்கின்றார்கள் முஸ்லிம்களுக்கு உடன்பாடில்லை அவர்கள் கேட்பதனை எங்களால் புரிந்துகொள்ள முடியும்ஆனால் எதற்காக அவர்கள் சுய நிர்ணய உரிமை கேற்கின்றார்கள்.?
ஒரு சமூகம் ஒரு தேசியமாக அங்கீகரிக்கப்பட்டால் சில சூழ்நிலைகளின் கீழ் அவர்களுக்கு பிரிந்து செல்லும் உரிமை இருக்கின்றது .



அதே நேரம் "தேசியம்" என்கின்ற அங்கீகாரத்தின் அடுத்த கட்டம்தான் " சுயநிர்ணய உரிமைக்கான" அங்கீகாரமாகும். சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப் பட்டால் அடுத்ததாக அவர்கள் உரிமை கோரக்கூடியதுதான் Nation State ( தனிப்
 பிராந்தியம்) இற்கான அந்தஸ்தாகும். தனிக்கலாச்சாரம்வரலாறு, மொழி, மதம்(கட்டயமாக தேவையில்லைஅடிப்படை காரணகளாகும்அவர்கள் தேசியமாக உரிமை கோரலாம்ஒரு சமூகம் தேசியமாக அங்கீகரிகப்பட்டால் தேசியத்திற்கு சில அடிப்படை காரணிகளுக்கு கீழ் பிரிந்து செல்ல கூடிய உரிமை இருக்கின்றதுதேசியமாக அங்கரீக்கப்பட்டதற்கு பிற்பாடு அவர்கள் கோருவதுதான் சுய நிர்ணய உரிமையாகும்ஒரு சமூகத்திற்கு சுய நிர்ணய உரிமை கிடைக்குமாயின்தனிப்பிராந்தியத்திற்கு (Nation State) உரிமை கோர முடியும்.அதற்பிறகு அவர்களால் தனி நாட்டுக்கான உரிமை கோரமுடியும்.
அவர்கள் தங்களினுடைய தலை விதியினை தாங்களே தீர்மாணித்து கொள்வதற்காகவே அவர்கள் சுயநிர்ணய உரிமையினை முன்வைக்கின்றார்கள்அதனோடு சமஷ்டியை கேற்கின்றார்கள், வடகிழக்கினை இணைத்து தர வேண்டும் என்கின்றார்கள், சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படுமாயின் அடுத்தது தனிப்பிராந்தியம்தான்(Nation State). உலகில் உள்ள அனைத்து தனி நாடுகளும் தனிப்பிராந்தியங்களாகதான் இருக்கின்றன.(Nation State). எல்லா தனிப்பிராந்தியங்களும்(Nation State). தனி நாடல்ல. ஆனால் எல்லா தனி நாடுகளும் தனிப்பிராந்தியங்களாகும்(Nation State).

ஆகவே அவர்களுடைய இலக்கு எங்கே இருக்கின்றது என்பதுதான் இங்கு முக்கிய விடயமாகும்சுய நிர்ணயம் எதற்கு கேற்கின்றார்கள் என்றால் பிரிந்து செல்லுகின்ற அவர்களுடைய இலக்கினை வைத்தே தூர நோக்கத்தின் அடிப்படையில் கேட்கின்றார்கள்தனிப்பிராந்தியம் என்ற பதத்திற்குள் செல்லாமல்(Nation State) சுய நிர்ணய உரிமை என்பதற்குள் மட்டுப்படுத்தி கொண்டிருக்கின்றார்கள்ஆகவே இது அவர்களுடைய நீண்ட திட்டமாகவே காணப்படுகின்றது.

இந்த நிலையில் எங்களுக்கு என்னவென்றே தெரியாமல் வடகிழக்கு இணைப்பிற்கு நாங்கள் ஆதரவுஆனால் எங்களுக்கு கரையோர மாவட்டம் தந்தால் சரி என்கின்றார்கள் சிலர்இல்லை தனி அலகு தந்தால் சரி என்கின்றார்கள் சிலர்தனி அலகு என்பது தென் கிழக்கு மட்டுமாவடகிழக்கில் பெரும்பான்மையாக வாழுகின்ற முஸ்லிம் நிலப்பிரதேசங்களை நில தொடர்பற்ற வகையில் இணைத்து தனி அலகு கேட்பதா?அதனை அரசாங்கம் அங்கீகரிக்குமா? என்பது ஒரு கேள்வி, அதனை தமிழ் தரப்பு அங்கீகரிக்குமா? என்பது அடுத்த கேள்வி.ஆனால் தமிழ் தரப்பு தென்கிழக்கினை கொடுப்பதற்கு ஆயத்தமாக இருக்கின்றார்கள்.

நாங்கள் எல்லோரும் தென்கிழக்கினை சேர்ந்தவர்கள்.எங்களுக்கு தென்கிழக்கு கிடைக்கும்தமிழ் தரப்பு தருவதற்கு ஆயத்தமாக இருக்கின்றார்கள் என்பதல்ல இங்கு பார்க்கப்பட வேண்டிய விடயம்நாங்கள் எலோரும் ஒரே கலீமாவினை மொழிந்த சமூகம்ஏறாவூர் மக்கள், ஓட்டமாவடி மக்கள், காத்தான்குடி மக்கள், கின்னியா மூதூர் மக்கள் எலோரும் எங்களினுடைய மக்கள்.இவர்களையெல்லாம் புறம்தள்ளிவிட்டு தென்கிழக்கினை மட்டும் பெற்றுக்கொள்ள முடியாது

அல்லது இந்த பகுதிகளையெல்லாம் இணைத்து தனி அலகு ஒன்றினை பெற்றுக்கொள்கின்றோம் என வைத்துக்கொண்டால் கலவரங்கள் அல்லது பிரச்சனைகள் வருகின்ற பொழுது நிலத்தொடபில்லாமல் இருக்கின்ற முஸ்லிகளுக்குதான் அதிகளவிலான பாதுகாப்பு பிரச்சனைகள் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கின்றது என்பதனை நாம் ஒவ்வொருத்தரும் சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.

அதிலும் முக்கியமாக எல்லை பிரச்சனைகளுக்கும் காணி பிரச்சனைகளுக்கும் தீர்வினை கொடுக்க முடியுமாஇந்த அதிகார பரவலாக்கத்தில் மிகவும் முக்கிய விடயமாக இருக்கின்ற பொருளாதாரம்அதாவது நிதியினை கையாளுகின்ற விதம் முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய விடயமாகும்.. ஆகவே இவ்வாறாக தலைக்கு மேலான பிரச்சனைகள் இருக்கதக்க நடைமுறையில் தனி அலகு என்பது ஒரும் சாத்தியப்படக்கூடிய விடயம் கிடையாது.

இந்த நிலையில்தான் மிகவும் ஆபத்தான நிலையில் முஸ்லிம் சமூகம் எமது நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.அடுத்தமாதம் வரவிருக்கின்ற அரசாங்கத்தினுடைய அதிகாரபகிர்வு சம்பந்தமான அறிக்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான பல பாதகமான விடயங்கள் வரவிருக்கின்றனஇதற்கு எமது சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் சரியான பதிலினை வழங்குவார்களாஅதிகார பகிர்வு விடயத்தில் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்படுமாயின் எங்களினுடைய பதவியினை இராஜினாமா செய்வோம் என ஒரு அமைச்சர் சம்மாந்துரையில் கூறியிருப்பதனை பார்க்கும் பொழுது நகைப்பாக இருக்கின்றது. அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட பிறகு அமைச்சு பதவியினை இராஜனாமாசெய்து எதற்காக என்று கேள்வி எழுப்பிய வை.எல்.எஸ்.ஹமீட் கண் கெட்ட பிறகு எதற்கு சூரிய நமஸ்காரம் என முஸ்லிம் சமூகமும் அரசியல் தலைமைகளும் மெளனிகளாக இருக்காமல் அதற்கு முன்னர் எமது சமூகம் விழித்துக்கொள்ள வேண்டும் எனக்கேட்டு தனது உரையினை முடித்தார்.




  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்