Post views-

பொத்துவில் மக்களின் கவணயீர்ப்பு பேரணி

எம்.ஜே.எம்.சஜீத்

பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட செல்வவெளி, சோளம் குளம் நீர்பாசனப் குளத்தை சட்ட விரோதமாக சுவிகரிக்கப் படுவதை எதிர்த்தும் அக்குளத்தினை புனரமைத்து தருமாறும் கோரி இன்று பொத்துவில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜும்மா தொழுகையின் பின்னர்  பொத்துவில் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணி பிரதேச செயலகம் வரை சென்றது. செல்வ வெளி கண்ட விவசாயிகள் பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து இது தொடர்பான மகஜரினை பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு சென்று பிரதேச செயலாளர் எம்.என்.எம். முஸரப் அவர்களிடம் கையளித்தனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பாக அறிவித்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு சுமூகமான தீர்வை பெற்றுதருவதாக பிரதேச செயலாளர் வாக்குறுதி அளித்துள்ளார்.




  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்