Post views-

பஸ் வண்டியொன்றின் மீது, இனந்தெரியாத நபர்கள் கல் வீசித் தாக்குதல்

(எம்.ஜே.எம் சஜீத்)
வாகரைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த  பஸ் வண்டியொன்றின் மீது, இனந்தெரியாத நபர்கள் கல் வீசித் தாக்கியதில், பஸ் நடத்துநர் காயமடைந்ததோடு, குறித்த பஸ் வண்டியும் சேதத்துக்குள்ளானது.
இச்சம்பவம் நேற்று (9) வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது.
திருகோணமலையிலிருந்து – மூதூர் ஊடாக பண்டாரவளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியே இவ்வாறு தாக்குதலுக்குள்ளானது.
மேற்படி பஸ் வண்டி, வெல்லவாய டிப்போவுக்குச் சொந்தமானது எனத் தெரியவருகிறது.
இது தொடர்பில் அவசர பொலிஸ் இலக்கத்துக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, வாகரைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்