அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் கபூலில் உள்ள அமெரிக்க பல்கலைகழகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கி சூடு சத்தமும் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலின் போது பல்கலை. மாணவர்கள், மற்றும் ஊழியர்கள் பலர் பிணை கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இத்தகவலை அந்நாட்டு போலீசார் உறுதி செய்துள்ளனர்
இந்த தாக்குதலில் சேத விபரங்கள் மற்றும் உயிர்பலி குறித்த தகவல்கள் சரிவர வெளியாகவில்லை தற்போது கபூல் போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினர் அமெரிக்க பல்கலைகழக வளாகத்தை சுற்றி வளைத்துள்ளனர்.
பல்கலைகழகத்தில் இருந்து தப்பி வந்த மாணவர்கள் கூறுகையில் ‛‛ முதலில்துப்பாக்கி சூடு நடத்தினர். பின்னர்தான் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. பல்கலைகழகத்திற்குள் பல மாணவர்களும் பேராசிரியகளும் தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.




