சப்னி அஹமட்
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு குளத்துக்கான புனரமைப்பு வேலை இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.நசீர் மற்றும் கிழக்கு மாகாண நீர்பாசண அமைச்சர் கிருஸ்ணப்பிள்ளை துரைராஜசிங்கம் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உணவு, விவசாய ஸ்தாபனத்தின் செயற்றிட்டத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தின் 63 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இக்குளத்தின் அணைக்கட்டு உள்ளிட்டவை புனரமைக்கப்படவுள்ளது.
சிறுபோக நெற்செய்கைக் காலத்தில் 1,100 ஏக்கர் நெற்செய்கைக் காணிகளுக்கு இக்குளத்திலிருந்து நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இக்குளத்தின் அணைக்கட்டு மற்றும் வான்கதவுகளை மேலும் 03 அடிக்கு உயர்த்தி புனரமைப்புச் செய்வதன் மூலம் மேலும் 600 ஏக்கருக்கு நீர் விநியோகிக்க முடியுமென நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெ.தவராஜா தெரிவித்தார்.



