Post views-

காணி உறுதிப்பத்திரங்களை உடன் வழங்கவும்: மாகாண சபை உறுப்பினர் சுபையிர்வேண்டுகோள்

(எம்.ஜே.எம்.சஜீத்)

ஏறாவூர் மிச்நகர் கிராம மக்களின் காணி உறுதிப்பத்திரங்களை பெற்றுக் கொடுக்கநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில்கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம்  (22) திங்கட்கிழமை நடைபெற்றது.இந்நிகழ்வில் உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மேற்குறித்தவேண்டுகோளை விடுத்தார்.


அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹும் டாக்டர் பரீட்மீராலெப்பை அவர்களினால் குடியேற்றப்பட்ட மக்களின் காணி உறுதிப்பத்திரம்இதுவரைக்கும் வழங்கப்படாமல் இருப்பதனால் அம்மக்கள் ஆவண உறுதிப்படுத்தல்கள்மற்றும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். 

குறிப்பாக அம்மக்கள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு செலுத்த வேண்டியிருந்தநிலுவைத் தொகையினை கடந்த 2012 ஆம் ஆண்டு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுமூலம் என்னால் பெற்றுக்கொடுக்கப்பட்டும் இதுவரைக்கும் அம்மக்களுக்கான உறுதிகள்வழங்கப்படவில்லைஎனவே அம்மக்களது காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள்விடுத்தார்.


இதன்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மட்டக்களப்புமாவட்ட வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பதிகாரிஉறுதிப்பத்திரங்களை வழங்க மிக விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும்உறுதியளித்தார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்