Post views-

முச்சக்கரவண்டி - வேன் விபத்து.

(க.கிஷாந்தன்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுங்காயமடைந்த நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

பத்தனை பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி தலவாக்கலை பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற வேனுடன் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து 26.08.2016 அன்று மாலை 2.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டியின் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியே இவ்வாறு படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்