Post views-

அம்பாரை மாவட்டத்தில் வீதி அபிவிருத்திப்பணிகள் ஆரம்பம்

எம்.ஜே.எம்.சஜீத்
மாகாண வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்தில் மாகான வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்குச் சொந்தமான வீதிகள், வடிகான்கள் என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இவ் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு (16) செவ்வாய்க்கிழமை அம்பாரை மாவட்டத்தின் பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபெதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை, மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மத்தும பண்டார, வீதி அபிவிருத்தித் திணைக்கள உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இவ்வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பொத்துவில் மத்திய வீதியில் 400m வடிகான் அமைக்கப்படவுள்ளது. இதற்காக 3.3மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொத்துவில் நிகழ்வுகள்
திருக்கோவில் கடற்கரை வீதி 500m கொங்ரீட் இடப்படவுள்ளது இதற்காக 5.6மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

திருக்கோவில் நிகழ்வுகள்
காரைதீவு மத்திய வீதியில் 300m வடிகான் அமைக்கப்படவுள்ளது இதற்காக 2.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காரைதீவு நிகழ்வுகள்
சம்மாந்துறை அலிவன்னியார் வீதி 600m காபட் இடுவதற்கு 6மில்லியன் ரூபாவும் சம்மாந்துறை மூங்கிலடி வீதிக்கு 600m காபட் இடுவதற்கு 10மில்லியன் ரூபாவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

சம்மாந்துறை நிகழ்வுகள்
இவ் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்