Post views-

மீன்பிடி இலாக வீதிக்கான விளம்பர பதாகை தனி நபரினால் உடைத்து நாசப்படுத்தப்பட்டுள்ளது



காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியினை செப்பனிடும் பணியினை ஆரம்பிப்பதற்காக 9ஆம் கிளை சந்தியில்  நடப்பட்டிருந்த வீதி அமைத்தல் தொடர்பான விளம்பரப்  பதாகையை 2016.08.24ஆந்திகதி (நேற்று இரவு) புத்தி சுயாதீனமற்ற ஒருவர் அடித்து  உடைத்து  நாசப்படுத்தி இருக்கின்றார்,  இது எவராலும்  திட்டமிட்டு  செய்யப்பட்ட செயலல்ல. 
இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் பலர் தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு அரசியல் ரீதியாக ஒவ்வொறு குழுவினரை குற்றம்சாட்டி முறையிட்டனர். இருந்தும் இந்த விடயத்தினை பெரிதுபடுத்தாமல் இதன் உண்மைத்தன்மையை விளங்கப்படுத்த வேண்டுமென்ற விடயத்தில் இச்செயலானது தான் யாரென்ற உணர்வை இழந்த புத்தி சுயாதீனமற்ற ஒரு தனிப்பட்ட நபரின் செயற்பாடாவே கருதவேண்டியுள்ளது.
காத்தான்குடி பிரதேசத்தில் பரவலாக சொல்லக்கூடிய இடங்களில் விளம்பரப் பதாதைகள் இருக்கும்போது இம்மன நோயாளி குறிப்பாக இதனை மாத்திரம் நாசப்படுத்தியுள்ளார் என்பது மிகவும் ஆச்சரியமான விடயமாகும். ஆகவே  இந்த விடயத்தினை  பெரிது படுத்தாமல் எமக்குள் அரசியல் ரீதியான எவ்விதமான  மன கசப்பினையும் தோற்றுவித்து விடாமல் இருப்பதற்காக  இதனை  ஊடகங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
இவ்வாறான மனநோயாளிகளை இனங்கண்டு குணப்படுத்துவதற்காக அன்மையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் காத்தான்குடி தள வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்ததொரு விடயமாகும்.





  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்