Post views-

அட்டன் - நோட்டன்பிரிட்ஜ் வீதியின் போக்குவரத்து பாதிப்பு

(க.கிஷாந்தன்)

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையினால் அட்டன் - நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் காசல்ரீ நீர்தேக்க பகுதியில் 23.08.2016 அன்று மதியம் 1.45 மணியளவில் பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரம் சரிந்து விழுந்ததால் மின் கம்பியும் அறுந்து விழுந்ததன் காரணமாக அப்பிரதேசத்திற்கான மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் மரத்தை வெட்டி அகற்றுவதற்கு தற்பொழுது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

போக்குவரத்து தடைப்பட்டுள்ளதன் காரணமாக லக்ஷபான மற்றும் நோட்டன்பிரிட்ஜ் செல்லும் வாகனங்கள் பல சிரமங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்