Post views-

லிந்துலையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

-க.கிஷாந்தன்-

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை பிரதேசத்தில் வைத்து கேரளா கஞ்சாவுடன் நடமாடிய ஒருவரை லிந்துலை பொலிஸார்   கைது செய்துள்ளனர். இச்சம்பவம் 19.08.2016 அன்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட நபரிடம் கஞ்சா பக்கட்டுகள் இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குறித்த நபரை பொலிஸார் சுற்றிவளைத்து சோதனை செய்துள்ளனர்.

இதன்போது அவரிடமிருந்து மூன்று கிராம் கொண்ட கேரளா கஞ்சா பக்கட்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்ததுடன் இவரை 20.08.2016 அன்று நுவரெலியா மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது அரசாங்கத்தால் சட்டரீதியாக தடைசெய்யப்பட்டுள்ள போதை பொருட்கள்  மலையக பிரதேசத்தில் மறைமுகமாக விற்பனை செய்வதை காணகூடியதாகவுள்ளது. 

இதேவேளை இவ்வாறான போதை பொருட்கள் வெளிமாவட்டங்களில் இருந்து சிலரால் இப்பிரதேசத்திற்கு கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்