ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ் ) – வரிப்பத்தான்சேனை
இஸ்லாமிய வரலாற்றில் அகீதா ரீதியாக பிளவுபட்ட மிக மோசமான பிரிவினர்களே இவர்கள். அன்று அரசியல் இயக்கமாகப் பிரிந்து இன்று வழிகெட்ட ஒரு சிந்தனை இயக்கமாக மாறியுள்ளார்கள்.
இவர்களின் சிந்தனைகள் அனைத்தும் இஸ்லாத்திற்கு முரணானது. அதாவது, இறுதி நபித்துவம் முஹம்மத் நபி ஸல் அவர்களின் பின் அலி ரழி அவர்களுக்கு இறுதி நபித்துவம் கிடைத்தது என்று வாதிடுகின்றார்கள்.
அதே போல், அலி ரழி அவர்களின் பின் இமாம்கள் தான் ஆட்சி செய்பவர்கள். இமாம்கள் பாவம் செய்தாதவர்கள் என்று சொல்லி இஸ்லாமிய அகீதா இரீதியாக பிளவுபட்டு விட்டார்கள். இப்படிப் பிளவுபட்டவர்கள் இன்று ஈரான், ஈராக், பஹ்ரேன், லெபனான், அஸர்பைஜான் போன்ற ஐந்து நாடுகளில் பெருமபான்மையாக வாழ்கிறார்கள்.
2020 இல் ஈரானை மையமாகக் கொண்ட ஷீஆ அரசொன்றை உருவாக்குவது தான் தான் அவர்களின் எதிர்காலத்திட்டம்.
இதற்கமைவாகத்தான் இன்று இலங்கையில் ”முஸ்தபா என்ற ஈரானுடைய பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சுமாராக 360 க்கும் அதிகமான இலங்கை மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.
இன்று இந்தப்பல்கலைக்கழகத்தினூடாக 350 க்கும் அதிகமான இலங்கை மாணவர்கள் ஈரானில் கல்வி கற்கின்றார்கள்.
அதே போல், அவர்களின் சிந்தனைத் தாக்கங்கள் அவர்களின் கிராமங்களிலும், வீடுகளிலும் அதிகரித்து வருகின்றது. எனவே, இது குறித்து இலங்கை முஸ்லிம் என்ற வகையில் நாங்கள் கரிசினை கொள்ள வேண்டும். அப்படி கரிசினை கொள்ளா விட்டால் இலங்கையில் அப்பாவி முஸ்லீம்களுக்கு மத்தியில் ஷீஆ சிந்தனை ஊடுருவி பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.www.shiavirus.com







