(க.கிஷாந்தன்)
கினிகத்தேனை பொல்பிடியவில் புதிதாக நிர்மாணிக்கப்படும் புரோட்லேண்ட் நீர்மின் நிலையத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
மேற்படி பாதிக்கப்பட்டவர்களை 11.08.2016 அன்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அனர்த்தம் ஏற்படுவதன் காரணமாக 37 குடியிருப்பாளர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
பாதிக்கப்பட்ட குடியிரப்பாளர்களுக்கு தற்காலிக நிவாரணமாக மாதாந்தம் தலா 30,000 ரூபா மின்சார சபையினால் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் பாதிக்கப்பட்ட 37 குடியிருப்பாளர்களையும் வேறு இடங்களில்குடியமர்த்த விரைவில் அரசாங்கத் தினால் நஷ்டஈடு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.





