கட்டாரில் இயங்கி வரும் இறக்காமம் அபிவிருத்தி சங்கத்தின் ஒகஸ்ட் மாதத்திற்கான ஒன்று கூடல் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை 18-08-2016 லக்பிம ஹோட்டலில் இதன் தலைவர் சகோதரர் எம்.ஐ. இமாம் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் இறக்காமம் மக்களின் அவசியத் தேவைகள்; பற்றியும், பாடசாலைகளில் மிகவும் கஷ்ட நிலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி மற்றும் குடும்ப நிலைகள் பற்றியும், கலந்துகொண்ட சகோதரர்களினால் கலந்துரையாடப்பட்டு சில தீர்க்கமான முடிவுகளும் தீர்மாணிக்கப்பட்டது.
இன்னும் இன் நிகழ்வில் கலந்து சிறப்பித்த சகோதரர்களின் நற்சிந்ததைத் துளியாக சகோதரர் ஏ.எல்.எம்.அஸ்ஹர் (ஹாமி) அவர்கிளினால் ‘தர்மம் காட்டும் பாதை’ எனும் தலைப்பில் உரையும் நிகழ்த்தப்பட்டு இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!




