Post views-

தமிழ் ஊடகவியலாளா் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கருத்தரங்கு

-அஷ்ரப் ஏ சமத்-

சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின்  அநுசரனையுடன்  தமிழ் ஊடகவியலாளா் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2016  என்ற தலைப்பில்  வெள்ளவத்தை பெண்கள் ஆய்வு நிலையத்தில் கடந்த ஞயிற்றுக் கிழமை(31) நடைபெற்றது. இதில் தமிழ் ஊடகவியலாளா் 40 பேர் கலந்து கொண்டனா். அவுஸ்த்திரேலியாவில் இருந்து வருகை தந்த சட்டத்தரணியும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான எழுத்தாளருமான சந்திரிக்கா சுப்ரமணியம் விரிவுரை நிகழ்த்தினாா்.

சிவன் அறக்கட்டளை இயக்குணா் கனேஸ்வரன் வேலாயுதம், கலாநிதி சாந்தி விக்கிரமரட்டன, ஞயிறு தினக்குரல் ஆசிரியரும் தமிழ் ஊடகவியலான் ஒன்றியத்தின் செயலாளா் பாரதி இராஜநாயகம்,  வீரகேசரி ஆசிரியா் எஸ்  ஸ்ரீ கஜன்,  ஊடக ஒன்றியத்தின் தலைவா் அ. நிக்சன், ஆகியோா் சான்றிதழ் வழங்கி வைத்தனா்.  பொருளாளா் ஜீவா விரிவுரையாளா் சந்திரிக்காகவுக்கு நினைவுப் பரிசில்களையும் வழங்கி வைத்தாா்.


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்