Post views-

வீட்டுக்கு வீடு மரம் - கட்சி அரசியல் நடத்தும் இடமாக அட்டாளைச்சேனை தள ஆயுர் வேத வைத்தியசாலை.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் சிந்தனையில் உருவான வீட்டுக்கு வீடு மரம் நடும் திட்டமானது இன்று நாடுபூராகவும் அவ்வப் பிராந்தியங்களின் அமைப்பாளர்களைக் கொண்டு நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

இதனடிப்படையில் இன்று 2016.08.01 திங்கட்கிழமை நாடுபூராகவும் மு.கா.வினுடைய பிரதேச அமைப்பாளர்களினால் இந்நிகழ்வு நடாத்தப்படுகின்றது. இந்நிகழ்வானது இன்று அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் வெகுவிமர்சையாக நடாத்தப்படுவது அங்குள்ள நோயாளர்கள் மத்தியில் பெரும் அசெளகரியங்களை ஏற்படுத்தியுள்ளது.

தனி ஒரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தும் இடமாக இது இருப்பதானது நல்லாட்சி அரசின் கொள்கைகளை காலால் போட்டும் மிதிக்கும் செயலாகவே மக்கள் பார்க்கின்றனர்.

அரச காரியாலயம் ஒன்றில் இவ்வாறான நிகழ்வினை நடாத்துவதனை சம்பந்தப்பட்டோர் தவிர்த்திருக்கலாம் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மு.கா வினுடைய பிரதேச காரியாலயம் ஒன்றில் நடைபெற வேண்டிய நிகழ்வொன்றினை அட்டாளைச்சேனை ஆயுள் வேத தள வைத்தியசாலையில் நடாத்துவதானது அரச காரியாலயம் ஒன்றினை துஷ்பிரயோகம் செய்வதேயன்றி வேறில்லை.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்