-க.கிஷாந்தன்-
பத்தாயிரம் ரூபாய்கள் மதிக்கத்தக்க 10 கேரளா கஞ்சா பக்கற்றுகளை தன்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவரை பண்டாரவளை பொலிஸார் 13.08.2016 அன்று இரவு கைது செய்துள்ளனர்.
பண்டாரவளை பஸ் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த குறித்த நபரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பொலிஸார் குறித்த இளைஞனை சோதனையிட்ட போது இவ் கஞ்சா பக்கற்றுகளை கைப்பற்றியதாக பொலிஸார தெரிவித்தனர்.
26 வயதுடைய பண்டாரவளை மக்குள்எல்ல பகுதியை சேர்ந்த சந்தேக நபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்




