கடத்தப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் சகீம் சுலைமான் வெளி நாட்டிலிருந்து உடைகளை இறக்குமதி செய்யும் பிரதான இறக்குமதியாளர் எனக் கூறும் பொலிஸார் குறித்த வர்த்தகரைப் பலர் மோசடி செய்துள்ளதாகவும் அது தொடர்பில் அவ்வர்த்தகர் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மோசடி தடுப்புப் பிரிவு ஆகியவற்றில் நான்கு முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தனக்கு 4 மற்றும் 3 கோடி ரூபா மோசடி செய்த இருவர் குறித்து வர்த்தகர் குற்றப் புலனாய்வு பிரிவிலும் 45 மற்றும் 35 இலட்சம் ரூபா மோசடி செய்த்வர்கள் குறித்து மோசடி தடுப்புப் பிரிவிலும் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இந் நிலையில் வர்த்தகருக்கு மோசடி செய்தோர் அதிலிருந்து தப்பிக் கொள்ள இந்த கடத்தலை முன்னெடுத்தனரா என்ற கோணத்திலும் மேலும் சில சந்தேகிக்கத்தக்க தடயங்களை மையப்படுத்தியும் விசாரணைகள் தொடர்கின்றன.




