Post views-

ஏறாவூர் பிரதேசத்தில் 500 குடும்பங்களுக்கு இலவச குடிநீர்

(MJM.Sajeeth)
கிழக்கு மாகாண சபை உருப்பினர் எம்.எஸ் சுபையிரின் வேண்டுகோளின் பேரில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள 500 குடும்பங்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படவுள்ளது.
இக்குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு (21) நாளை மாலை ஏறாவூர் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஆசிரியர் ஏ.எல் றியாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஏறாவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் சுபையிர் கௌரவ அதிதியாகவும், முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் யூ.எல் ஜெயினுதீன் மற்றும் முன்னாள் நகர சபை உறுப்பினர்கள் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இதன்போது 500 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பிற்கான காசோலை வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்