Post views-

50 அடி ஆழத்தில் ஒரு வீடு முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது - மேலும் சில வீடுகள் பாதிப்பு (Photo)

(க.கிஷாந்தன்) 


கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பிட்டிய பகுதியில் தாழிறக்கம் காரணமாக 50 அடி ஆழத்தில் ஒரு வீடு முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. அத்தோடு மேலும் அப்பகுதியிலிருந்த 4 வீடுகள் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு முற்றாக சேதமாகியுள்ளது.

இச்சம்பவம் 07.08.2016 அன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சுரங்கபாதைகள் அமைக்கப்படுவதனால் அதில் ஏற்படும் அதிகமான அதிர்வுகள் காரணமாக இவ்வீடுகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு ஏற்கனவே அதிகாரிகள் ஊடாக அனுப்பப்பட்டதன் காரணமாக உயர் ஆபத்துகளும், காயங்களும் எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

எனினும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டுள வருகின்றனர்.





  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்