இலங்கையர்கள் ஒவ்வொருவருக்கும் 40 ஆயிரம் ரூபாவை அடிப்படைச் சம்பளமாக பெறக்கூடிய பொருளாதார கட்டமைப்பை ஏற்படுத்துவது அவசியமெனவும் சம்பளத்தை அதிகரித்து, பொருட்களின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் ‘ரணில் விக்ரமசிங்க’ தெரிவித்துள்ளார்.
இன்று (25) புஹாரி ஹோட்டலின் நிர்வாகக் கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெறும் சம்பளத்துக்கு அமைவாக இலங்கையையும் தரமுயர்த்துவது அவசியமாகும் என்பதையும் வலுயுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




