ஹம்பாந்தோட்டை தனமன்வில பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு குறித்த நபர் வீட்டிலிருந்து தனது தென்னை தோட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது யானை தாக்கியுள்ளது.
40 வயதான தனமன்வில பகுதியை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரதேச பரிசோதனைக்காக தெபரவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களை விட தற்போது இந்த பிரதேசத்தில் யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர் மேலும் அதிக உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.




