Post views-

இளம் வர்த்தகர் ஷகீம் சுலைமான் (29) மாயம். போலீசார் தேடல்.

29 வயதுடைய வர்த்தகர் காணாமல் போனமை தொடர்பில் விரிவான புலனாய்வு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு, பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொஹமட் ஷகீம் சுலைமான் என்று வர்த்தகர், ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியில் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள், பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

இதேவேளை, அவர் தங்கியிருந்த பம்பலப்பிட்டி கொத்தலாவல அவனியு பகுதியில் இரத்தத் துளிகள் சிந்தப்பட்டுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் கடத்தி சென்றுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து துணி இறக்குமதி செய்து விநியோகிக்கும் இவர் தனக்கு பணம் தர வேண்டியவர்கள் தொடர்பில் பல தடவைகள் போலீசில் முறைப்பாடுகள் செய்துள்ளார் எனவும் தெரிய வருகிறது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்