(க.கிஷாந்தன்)
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோவர் கிரன்லி தோட்டத்தினை சேர்ந்த சுந்தராஜ் அணிஸ்குமார் வயது 23 என்ற இளைஞன் கடந்த 23 ம் திகதி அட்டன் சென்ற போது காணாமல் போயுள்ளதாக இவரின் பெற்றோர்கள் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.
குறித்த இளைஞன் அன்றைய தினம் தனது உறவினர்களிடம் தான் அட்டன் நகரத்திற்கு சென்று வருவதாக கூறிச்சென்றுள்ளார்.
அன்று முதல் இவரை வீடு திரும்பவில்லையென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவர் தொடர்பில் தகவல் கிடைத்தால் 072 9931403 என்ற அழைப்பேசிக்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு இவரின் உறவினர்கள் கோரியுள்ளனர்.




