Post views-

23 தனி வீடுகளை கட்டி அமைக்க பசும்பொன் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம்



(க.கிஷாந்தன்) 
கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் 23 தனி வீடுகளை கட்டி அமைக்க 07.08.2016 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் பசும்பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இந்த அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.
இதில் மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் தலைமை தாங்கி அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன்போது இவ் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் உள்ளிட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, ஆர்.இராஜாராம் ஆகியோருடன் மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் ஏ.லோறன்ஸ், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
ரொசிட்டா தோட்டத்தில் இலக்கம் ஒன்று தொடர் குடியிருப்பு லயத்தில் அடிப்படை வசதிகள் அற்ற 23 வீடுகளை அவ்விட்டத்திலிருந்து அகற்றி அவர்களுக்கு புதிய தனி வீடுகளை அமைத்துக்கொடுக்க ஒரு கோடியே 35 இலட்சம் ரூபா செலவில் வீடுகளை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 07.08.2016 அன்று நடைபெற்ற வேளையில் இடம்பெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம்.



  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்