(க.கிஷாந்தன்)
கொழும்பிலிருந்து பொகவந்தலாவிற்கு பேரூந்தில் கொண்டு வரப்பட்ட புகையிலை தூள் அடைக்கப்பட்ட 1875 என்.சி. டின்களுடன் ஒருவர் பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்திற்கு செல்லும் சந்தியில் வைத்து கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 08.08.2016 அன்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட என்.சி டின்கள் 195000 ரூபா பெறுமதி என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 09.08.2016 அன்று அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.




