Post views-

ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு 104 வைத்தியர்களை நியமிக்க ஏற்பாடு சுகாதார அமைச்சர் நஸீர்

சப்னி அஹமட்
கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு 104 வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களில் சமூக மருத்துவ வைத்தியர்கள் 70 பேரும் வைத்திய அதிகாரிகள் 34 பேரும் அடங்குவதாக அம்மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார். 

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள பாண்டிருப்புப் பிரதேசத்தில் 5.5 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இம்மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வெளிமாகாணங்களைச் சேர்ந்த சுமார் 60 வைத்தியர்கள் இடமாற்றம் கோரியுள்ளனர்.  இவர்களுக்கு இடமாற்றங்களை வழங்குவதில் சிரமம் காணப்பட்டது. ஆனால், தற்போது இடமாற்றம் கோரியுள்ள வைத்தியர்களுக்கு இடமாற்றங்களை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு ஆயுர்வேத வைத்திய சேவையை வழங்க வேண்டுமென்ற நோக்கில் ஆயுர்வேத வைத்தியசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். 


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்