Post views-

ஷவ்வால் தலைப் பிறை தென்பட்டது; நாளை நோன்புப் பெருநாள்

ஹிஜ்ரி 1437ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப் பிறைஇன்று செவ்வாய்க்கிழமை மாலை நாட்டின் பல பாகங்களில் தென்பட்டுள்ளமையினால், நாளை புதன்கிழமை இலங்கை வாழ் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்தது.


புனித ஷவ்வால் மாத தலைப் பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. 



இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஹிஜ்ரி 1437ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை நாட்டின் பல பாகங்களில் இன்று மாலை தென்பட்டதாக ஆதாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை புதன்கிழமை இலங்கை வாழ் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்