Post views-

பயிற்சியை முடித்து வெளியேறிய அதிபர்களுக்கு நியமனம் வழங்கவும்

போட்டிப் பரீட்சை மூலம் அதிபர்களாகத் தெரிவு செய்யப்பட்டு குறிகியகால பயிற்சியை முடித்து அண்மையில் வெளியேறி அதிபர் நியமனம் பெற்ற சகல அதிபர்களுக்கும் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருகோணமலை  மாவட்ட ஐக்கிய தேசியக் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகருப் தொரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசூவர்கானுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள  அனேகமான பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் நிலவுவதாக அறிகிறேன். எனவே, இவ்வாறான பாடசாலைகளில் புதிதாக நியமனயனம் பெற்றவர்களை அதிபர்களாக நியமித்து, சிறந்த பாடசாலை நிர்வாக கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டம். அத்துடன், 

இது தொடர்பாக எடுக்கப் படுகின்ற நடவடிக்கையினை எனக்கு ஒரு வார காலத்தக்குள் அறியத் தர வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏ.எம்.ஏ.பரீத்

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்