Post views-

ஈராக் போர்: பிளேயர், ஹோவார்ட் நியாயப்படுத்துகின்றனர்

2003ஆம் ஆண்டு ஈராக் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கா தலைமையிலான ஊடுருவல், தேவையற்றது அல்லது அந்த நேரத்தில் நியாயப்படுத்தப்பட முடியாதது என, அப்போர் தொடர்பாக விசாரணை செய்வதற்காக ஐக்கிய இராச்சியத்தில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, தனது அறிக்கையில் தெரிவித்துள்ள போதிலும், ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர், அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜோன் ஹோவார்ட் இருவரும், அந்தப் போரை நியாயப்படுத்தியுள்ளனர். 

அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் நெருங்கிய நண்பர்களாகக் காணப்பட்ட இவர்களிருவரும், அந்தப் போரில் பங்குபற்றுவதற்கான முடிவை, தங்கள் நாடுகள் சார்பாக எடுத்திருந்த நிலையிலேயே, அதை நியாயப்படுத்தியுள்ளனர். ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் உள்ளன என்ற புலனாய்வுத் தகவலுக்கு ஏற்பவே இந்தப் போர் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அவ்வாறான ஆயுதங்கள் மீட்கப்பட்டிருக்கவில்லை. 

எனினும், அந்த நேரத்தில் கிடைத்த தகவல்களுக்கு ஏற்பட, சரியான முடிவை எடுத்ததாக, ஹோவார்ட் தெரிவித்தார். 

புலனாய்வுத் தகவல்களில் பிழை இருந்த போதிலும், எடுத்த முடிவுக்கான படிமுறைகளில் தவறு இருக்கவில்லை என அவர் தெரிவித்தார். 

டொனி பிளேயர், அப்போதைய ஜனாதிபதியான புஷ்ஷுக்கு, "உங்களோடு நான் எப்போதும் இருப்பேன்" என எழுதிய கடிதம், சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள போதிலும், அப்போது எடுத்த முடிவு சரியானது எனவும், அதனால் உலகம் தற்போது சிறந்ததாகவும் அமைதியானதாகவும் காணப்படுவதாகவும் தெரிவித்தார். 

எனினும், அந்தப் போரைத் திட்டமிடுவதில் காணப்பட்ட தவறுகளை ஏற்றுக் கொள்வதற்காகவும், அதற்காக வருந்துவதாகவும் பிளேயர் குறிப்பிட்டார் \
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்