மட்டக்களப்பு மாவட்டத்தின், வாகரை - கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனை மற்றும் ஆலங்குளம் தமிழ், முஸ்லிம் கிராமங்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் காரமுனை ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் இரு கிராமங்களிலும் வசிக்கும் பொதுமக்களின் அழைப்பையேற்று 2016.03.30ஆந்திகதி (புதன்கிழமை) திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இவ்விஜயத்தின்போது காரமுனை கிராமத்திற்கு செல்லும் வீதியில் முறையற்ற விதத்தில் நாளாந்தம் கொட்டப்படும் குப்பை கூழங்களை தேடி வரும் யானைகள் பிரச்சினைகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டு வரும் யானைகளுக்கான மின்சார வேலி, காரமுனை - ஆழங்குளம் இரு கிராமங்களையும் இணைக்கும் பொதுமக்கள் அன்றாடம் பல சிரமங்களுக்கு மத்தியில் பயணிக்கும் வீதி தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை அங்கு வசிக்கும் பொதுமக்கள் மாகாண சபை உறுப்பினரிடம் தெரியப்படுத்தினர்.
இக்கிராமங்களுக்கு விஜயத்தினை மேற்கொள்ளும் முன்னர் இக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் மின் இணைப்பு இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாகவும் அம்மக்களின் நன்மை கருதி வெகுவிரைவில் மின்சார இணைப்பினை பெற்றுக்கொடுக்குமாறு மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் ஹைதர் அலி அவர்களினால் மாகாண சபை உறுப்பினரிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் இம்மக்களின் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்று வடக்கு ஆகிய இரு பிரதேச சபைகளின் ஒத்துழைப்புடன் காரமுனை கிராமத்திற்குச் செல்லும் வீதியருகில் நாளாந்தம் முறையற்ற விதத்தில் கொட்டப்படும் குப்பைகளை தடைசெய்து அவ்விடத்தினை சுத்தப்படுத்தியதோடு மற்றும் ஆலங்குளம் கிராமத்தில் குண்றும் குழியுமாக காணப்பட்ட வீதியினை சமப்படுத்தி மக்கள் பயன்படுத்தும் வன்னம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்கள் இரு கிராம மக்களுக்கும் அளித்த வாக்குறுதிக்கமைவாக 2016.05.31ஆந்திகதி (செவ்வாய்க்கிழமை) தீர்வினை பெற்றுக்கொடுத்தார்.
மீண்டும் காரமுனை ஜூம்ஆ பள்ளிவாசல் நிருவாக சபையின் அழைப்பையேற்று 2016.07.18ஆந்திகதி (திங்கட்கிழமை) விஜயத்தினை மேற்கொண்ட பொறியியலாளர் சிப்லி பாறுகிடம் பிரதான வீதியிலிருந்து காரமுனை கிராமத்திற்கு செல்லும் மியான் குள வீதியினை சமப்படுத்தித்தருமாறும், அக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் காணிகளுக்கு அரசாங்கத்தின் உதவியுடன் உறுதிப்பத்திரத்தினை பெற்றுத்தருமாறும், வயற்காணிகளை முறையற்ற விதத்தில் குருக்கறுத்து செல்லும் யானை வேலிகளுக்கு தீர்வினை பெற்றுத்தருமாறும், பிரதான வீதியிலிருந்து காரமுனை கிராமம் வரையுள்ள வீதியால் யானைகளின் அட்டகாசங்களிலிருந்து மக்கள் பயணிக்கும் வகையில் புதிதாக அவ்வீதிக்கு யானை வேலியினை பெற்றுத்தருமாறும் மற்றும் வாழ்வாதார உதவிகள் தொடர்பான பிரச்சினைகள் என்பன பொதுமக்களினால் மாகாண சபை உறுப்பினரிடம் கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டன.
அத்தோடு. கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றாக இக்கிராமத்திற்கான மின் இணைப்புக்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதனை பல பிரயத்தனங்களுக்கு மத்தியில் பெற்றுத்தந்தமைக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்கிற்கு பொதுமக்கள் நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் காரமுனை ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் கே.எல்.எம். அசனார், செயலாளர் எஸ். நளீம் உட்பட நிருவாக சபை உறுப்பினர்கள், அப்பிரதேசத்திற்கு பொருப்பான கிராம சேவை உத்தியோகத்தர், அப்பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.
M.T. ஹைதர் அலி








