மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 15 மில்லியன்ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 28 தோட்டங்களைச் சேர்ந்த 472 தொழிலாளர் குடும்பங்களுக்கு கூரைத்தகடுகள்30.07.2016அன்று மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமுதய அபிவிருத்தி அமைச்சர்பழனி திகாம்பரம் தலைமையில் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் வழங்கி வைக்கப்பட்டன. 10,039 கூரைத்தகடுகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோறன்ஸ், மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி மற்றும் தோட்ட அதிகாரிகள், தோட்ட தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(க.கிஷாந்தன்)






