Post views-

வேன் - மோட்டர் சைக்கிள் மோதி விபத்து - ஒருவர் படுங்காயம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

அட்டன் நுவரெலியா ஏ -7 பிரதான வீதியில் தலவாக்கலை சென். கிளயார் பகுதியில் அட்டன் பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கி சென்ற வேனுடன் தலவாக்கலை பகுதியிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலொன்று மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டர் சைக்கிளை செலுத்திய நபரே இவ்வாறு பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இந்த
 விபத்து 18.07.2016 அன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

படுங்காயங்களுக்குள்ளான மோட்டர் சைக்கிளை செலுத்திய நபர் கொட்டகலை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் வேன் சாரதியை கைது செய்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)






  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்