சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு (04) திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்-ஷெய்க் எம்.ஐ.எம்.அமீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, கணக்காளர் எம்.எம்.உசைனா,திவிநெகும பிரதேச முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் பிரதேச செயலக நலன்புரிச் சங்க செயலாளர் எம்.ஐ இஷாக், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வர்த்தக சமூகத்தினர், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ரமழான் பற்றிய நற்சிந்தனையினை அஷ்-ஷெய்க் சட்டத்தரணி என்.எம்.முஜீப் நிகழ்த்தினார்.
.






