அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தின் அன்மைக்காலமாக ஏற்பட்டுவரும் ஒலுவில் கடலரிப்புக்கு தீர்வு வேண்டும் எனக்கூறி இன்று (29) ஒலுவில் ஜும்மா பள்ளிவாலிருந்து ஜும்மா தொழுகைக்கு பின் கண்டன பேரணி ஒன்றினை ஆரம்பித்தனர்.
ஒலுவில் ஜும்மா பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்பாட்டத்திற்கு மீனவர்கள், கடலரிப்பினால் பாதிகப்பட்ட மக்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். குறித்த ஆர்ப்பாட்டதின் போது; ’அரசே ஊரை காவு கொள்ளும் கடல் அரிப்பை நிறுத்து’, ’அரசே ஒலுவில் கிராமத்திற்கு நிரந்தர தீர்வை கொடு’, ‘அரசே அழகிய ஒலுவிலை அழிவில் இருந்து காப்பாற்று’, ’அரசே துறைமுக அபிவிருத்தியால் ஏற்பட்ட கடல் அரிப்பை நிறுத்து’, ’அரசே இலங்கை தீவில் இருந்து ஒலுவில் ஒழிய வேண்டுமா’ ‘அரசே ஒலுவில் மக்களின் கண்ணீரைத் துடை’, ’மீனவர் நிலங்களை மீட்டுத்தா’, ’வாழ்வாதாரத்தினை அழிக்கும் கடல் அரிப்பினை உடன் நிறுத்து’ என பலகோசகங்கள் எழுப்பியவாறு தங்களது அமைதியான ஆர்ப்பாடத்தினை மேற்கொண்டனர்.
இதன் பின்னர் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களால் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு அமைதியாக சென்று ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களான ஹக்கீம், அர்ஜூன ரணதுங்க மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கான மகஜரினையும் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் அதிசயராஜிடம் கையளித்து தங்களது ஆர்பாட்டத்திற்கான நோக்கத்தினையும் எத்திவைத்தனர்.











