Post views-

கவனம் கொஞ்சம் மனசில் வைங்க!

நீத்த வட்டைக்குள்ள
நெல்லெறிஞ்ச கதையெல்லாம்
கீத்து வயலால நடந்து
கிளி கதச்சிப் போறதுபோல்
பாத்தும் பாக்காம பேசுற
பழக்கமிது நல்லாரிக்கா?
**
பாக்காம விட்டா இது
பழகாம போகுமெண்டு
சேத்திக்கு செஞ்சதால
சிரிப்படங்கிப் போனதுபோல்
என்ன செஞ்ச ஒங்களுக்கு
இப்புடி இரிக்கிறயள்??
**
ஆசயில அடுப்பு மூட்டி
அரிசரிச்சி கொதிக்க வெச்சி
நாசமா போன நசல்கோழி
ஒண்டு வந்து-இப்புடி
பேசாம ஆக்கி என்ன
பேதலிக்க வெச்சதென்ன?
**
அதப் பாத்தன் இதப் பாத்தன்-என
அழகழகா பொய் சொல்லி
அங்கால இஞ்சால எண்டு
அடி சறுக்கிப் போனிங்கெண்டா
கழுத்தறுத்தான் போடு ராசா
கவனம் இத மனசில் வைங்க
**
பண்ணையொண்ட தாங்குறயள்
பாவமாத்தான் இரிக்கிறது
என்ன செய்ய தலை எழுத்து
எண்டுதான் நானிரிக்கன்
முன்னயப் போல தாங்கா-இன்னும்
முளுசாக நம்பிரிக்கன்
**
என்ன செய்யப் போறா எண்டு
ஏதாச்சும் கொழச்சல் வந்து
பயப்புடட்டும் எண்டு எண்ணி
பாசாங்கு காட்டி என்ர
எண்ணத்தில மண் விழுந்தா
எரணத்துல இடி எறங்கும்!
**
--ரோஷான் ஏ.ஜிப்ரி.--
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்