Post views-

புல்மோட்டையின் கரையோரங்களில் அதிகரித்துவரும் கடலரிப்பு அபாயம். கவனத்தில் கொள்ளுமா இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபானம்???......

திருகோணமலை மாவட்டத்தின் 54KM க்கு அப்பால்  வடக்காக குச்சவெளி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்டதும்  முல்லைத்தீவு மாவட்டத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள இயற்கை எழில் நிறைந்த ஒரு பிரதேசமே புல்மோட்டையாகும். இப்பிரதேசத்தின் கரையோர பகுதிகளில் கடலரிப்பு அபாயம் அதிகரித்து வருவதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்கு அதிகளவிலான அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபானம் இப் பிரதேசத்திலே  அமையப்பெற்றிருப்பதோடு சர்வதேச அரங்கில் அதிக பெறுமதிவாய்ந்த தரமான இல்மனைட் மணல் ஏற்றுமதி செய்யும் நாடாக இலங்கை காணப்படுகிறது. இலங்கை தொல்கால பாறையில் அமைந்திருப்பதாலே  நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கனிய வளங்கள் நிறைந்து விளைந்து வளிந்து காணப்படுகிறது என்பது புவியியலாளர்களின் வாதம்,  நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 02% சதவீத இலாபாத்தை ஈட்டித்தரும் இல்மனைட் மணல் படிவுகள் கிழக்கின் புல்மோட்டை பிரதேசத்தின் கரையோரப்பகுதிகளிலே தாராளமாய் கொட்டிக்கிடக்கிறது, குறித்த தொழிட்சாலையினால் மேட்கொள்ளப்படுகின்ற கரையோர மண் அகழ்வினாலேயே  மேற்படி பிரதேசத்தில் கடலரிப்பு அபாயம் ஏற்படுகிறது என்பது கவலைக்குரியதாகும்.


வருடந்தோரும் அகழ்ந்தெடுக்கப்படும் மண்ணில் இருந்து 100000T(டான்) Ilmenite இல்மனைட், 9000T(டான்) Rutile ரூட்டைல், 5500T(டான்) Zircon சேர்கொன், 4000T(டான்) Taitaniyam டைட்டானியம் போன்ற கனியங்கள் பிரித்தெடுக்கப்பட்டு   வெளிநாடுகளுக்கு முடிவுப்போருளாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இம்மண் அகழ்வானது புல்மோட்டை பிரதேசத்தின் கிழக்கே வடக்கு தெற்காக சுமார் 7km வரையான பரந்த        கரையோரப்பகுதிகளில் வருடம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன, இருப்பினும் இவ்வகழ்வினால் கடலோர ஆழம் அதிகரிப்பதோடு கரையோர நிலப்பரப்பும் கடலைரிபிற்குள்ளாகி கடல்நீர் உட்புகுந்து நிலம் கடலினால் ஆட்கொள்ளப்பட்டு இயற்கை சமநிலை பாதிப்புறுகிறது அதுமாத்திரமின்றி இப்பிரதேச மக்களில் பெரும்பாலானோரின் ஜீவனோபாய தொழிலான மீன்பிடி பதிப்புறுவதோடு சுற்றுலா பயனிகளைக் கவர்ந்திழுக்கும் இயற்கை எழில் நிறைந்த தளங்களும் சிதைவடைந்து வருவது பெரிதும் வேதனையளிக்கிறது.

இருப்பினும் அகழ்வின் மூலம் பெறப்படும் மண்ணிற்கு பிரதியீட்டு மண்ணாக மண் பிரிகையில் எஞ்சும் கழிவு மண்ணை குறித்த பகுதிகளில் இட்டு நிரப்புவதன் மூலம் கடலரிப்பை ஓரளவு தவிர்க்க முடியும் ஆனால் குறித்த இப்பாதுகாப்பு நடவடிக்கையை குறித்த தொழிற்சாலை மேற்கொள்ள தவறியமையே கடலரிப்பு அபாயம் அதிகரிக்க பிரதான காரணமாக அமைந்தது என புவியியலாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 1957ஆம் மற்றும் 1961ஆம் ஆண்டுகளில் இருந்து இன்றுவரை  நாட்டின் தேசிய உற்பத்தியிலும் பாரிய அந்நிய செலாவணியை அதிகமாக  ஈட்டிக்கொடுப்பதிலும் நாட்டின் பொருளாதார முதல்களில் முக்கிய பெரும் பங்கை  இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் ஆற்றிவருகிறது. அவ்வாறே இத்தகு பெரும் வருமானத்திற்கு காரணகருதாவாக  திகழும்   புல்மோட்டை பிரதேசத்தின் கரையோர வளங்களையும் அதன் சூழல் சமநிலையையும்  இருப்பையும் பாதுகாக்கவேண்டிய கட்டாய கடமை குறித்த தொழிட்சாலைக்கே இருக்கிறது  மேலும் கடலரிப்பை தடுப்பதற்கான தடுப்பு வேலிகளை அமைப்பதோடு குறித்த பாதிப்புற்ற பகுதிகளுக்கு பிரதியீடாக மண்ணிட்டு செப்பம் செய்து இயற்கைக்கு பங்கமின்றி மண் அகழ்வில் ஈடுபடவேண்டிய கட்டாய கடப்பாடும் பொறுப்பும் மேற்படி தொழிட்சாலை அதிகாரிகளையே சாரும்.

எனவேதான் மேற்படி தொழிற்சாலையும் உரிய அதிகாரிகளும் இவ்விடயத்தை தங்களது விசேட கவனத்தில் கொண்டு கடலரிப்பு அபாயத்தை முற்றாக தடுப்பதற்கான விசேட நடவடிக்கைகளை துரித கதியில் முன்னேடுப்பதோடு எதிர்காலத்திலும்  ஏற்படாதவண்ணம் புதிய தடுப்பு வேலைத்திட்டங்களை உடனடியாக அமுல்ப்படுத்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என  குறித்த பிரதேச மக்கள் வேண்டி நிற்கின்றனர் அதுவே மக்களின் முக்கிய  எதிர்பார்ப்புமாகும்.

குறிப்பு :- மேற்படி பதிவானது குறித்த தொழிற்சாலையை எவ்வித இலாபம் கருதியும் விமர்சிக்கும் நோக்கோடு வேளியிடப்பட்டதல்ல மாறாக எமது பிரதேசத்தின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அதீத பற்றும், நாட்டமும் கொண்டவன் என்ற அடிப்படையில் எதிர்காலத்தில் பெரும் சவாலாக தலை தூக்கவிருக்கும் இயற்கை அனர்த்தமான கடலரிப்பிலிருந்து எமது பிரதேசத்தின் கரையோரம் மற்றும் இயற்கை சமநிலை பாதுகாக்ககப்படவேண்டும் என்ற தூய எண்ணம்கொண்ட ஒரு சமூக தொண்டனாக நீண்ட காலமாக பாராமுகமாக விடபட்டிருக்கும் இவ்விடயம் பற்றி பிரதேச மக்களுக்கு தெளிவுபடுத்தவும்  மேற்படி விடயத்தினை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு எத்திவைப்பதன் ஊடாக உடனடி தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையோடும்  வெளியிடப்பட்டதாகும்.
அனைவரது கவனத்திற்கும், விழிப்புணர்வுக்காக...... 

நன்றி.
சமூக நலன் விரும்பி .
றிஸ்வான் சுஹைப்.




  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்