அட்டாளைச்சேனை அல்- இபாதா கலாசார மன்றத்தின் 5 வது வருட இப்தார் வைபவமும், பரிசளிப்பு விழா மற்றும் பாராட்டு நிகழ்வும்
அட்டாளைச்சேனை அல்- இபாதா கலசார மன்றத்தினால் வருடா வருடம் புனித றமழான் மாதத்தினை சிறப்பிக்கும் நோக்குடன் மூத்த மார்க்க அறிஞர்கள் கலந்து சிறப்பிக்கும் ஹதீஸ் மஜ்லீஸ் நிகழ்வின் 5வது வருட இறுதி நிகழ்வும் இப்தார் வைபவமும், ஹதீஸ் மஜ்லிஸ் போட்டி நிகழ்ச்சியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழாவும், அக்கரைப்பற்று வலயத்தில் இருந்து புதிய அதிபர் நியமனம் பெற்ற அதிபர்களை கௌரவிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 2016.07.03 ம் திககி ஞாயிற்று கிழமை பி.ப 04.00 மணிக்கு அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடியில் அல்- இபாதா கலாசார மன்றத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளருமான மௌலவி யு.எம். நியாஸி (ADE) அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளதாக அல் - இபாதா கலாச்சார மன்றத்தின் செயலாளர் எம்.எஸ். முகம்மட் பாஹிம் (ஆசிரியர்) தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உலமாக்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், தினைகளங்களின் தலைவர்களும், கலந்து சிறப்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.
(எம்.ஜே.எம்.சஜீத்)




