Post views-

பள்ளிவாசல் மீது கல்லெறிந்தவர்கள், குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டனர்

கடந்த வருடம் மே மாதம் 30ஆம் திகதி பொரல்லை முஸ்லிம் பள்ளிவாசல் மீது கல்லெறிந்த குற்றச்சாட்டின் சந்தேக நபர்கள் இன்று நீதவான் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 5 சந்தேகநபர்களும் இன்றைய தினம் -15-  கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் நிஹார் முன்னிலையில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டமைக்கு தண்டணையாக சந்தேக நபர்களிடம் 10,000 ரூபாய் அடிப்படையல் 5 சந்தேக நபர்களிடமும் பணத்தை பெற்று அதை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதவானிடம் கோரியுள்ளார்.

சந்தேக நபர்களும் இதற்கு ஒத்துக்கொண்டதுடன்,குறித்த வழக்கை இன்றுடன் முடிவுக்கு கொண்டுவருவதாகவும் நீதவான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்